இலங்கை நிர்வாக சேவை சங்கம் இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில்

இலங்கை நிர்வாக சேவை சங்கம் இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில்

இலங்கை நிர்வாக சேவை சங்கம் இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2015 | 7:19 am

சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று முதல் ஈடுபடுவதற்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகழ்வு திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் காரணமாக சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் செயலாளர் ரோஹன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவுகளை சேர்த்து உடனடியாக சம்பள பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும், தற்போது காணப்படும் ஓய்வூதிய கொடுப்பனவிற்கான கொள்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் அரச சேவையாளர்களுக்கான ஏனைய கொடுப்பனவுக்கு கீழ் வழங்கப்படும் பிரதிலாபங்களை இரத்து செய்யக்கூடாது ஆகிய மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் தடவையாக அரச நிர்வாக சேவை சங்கத்தினர் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று ஈடுபடவுள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.

அதற்கமைய வேலை நாட்களில் காலை எட்டு முப்பது தொடக்கம் மாலை நான்கு மணி வரை சாதார முறையில் பணி புரிவதுடன், மேலதிக சேவையை தவிர்த்தும் செயற்பட அரச நிர்வாக சேவையாளர்கள் தீர்மானித்துள்ளார்.

கூட்டங்களை பகிஷ்கரிப்பதுடன் விசேட சேவைகளும் முன்னெடுக்கப்படாது எனவும் இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் செயலாளர் ரோஹன டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்