இன்று முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2015 | 7:35 am

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளின் 18 சங்கங்கள் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் மற்றும் ஏனைய சலுகைகள் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

[quote]அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த குழு மற்றும் அதனுடைய சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்ைகயில் ஈடுபடவுள்ளன. எனினும், அவசர சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அத்துடன், சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலை, காசல் மகப்பேற்று வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலை, புற்றுநோயே் வைத்தியசாலை, ஶ்ரீமா பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை என்பவற்றில் தொழிற்சங்க நடவடிக்ைக முன்னெடுக்கப்பட மாட்டாது. இறுதி தருணத்திலாவது இதற்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.[/quote]

எனினும் வாகன அனுமதிப் பத்திரத்திற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கபடவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வட மேல் மாகாணத்தில் நிறைவுகாண் வைத்திய சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்திய பரிசோதனை தொழில்நுட்ப விஞ்ஞான உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்புக்கு காரணமான விடயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதாக, மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தீர்மானித்ததை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக, நிறைவுகாண் வைத்திய சேவை சங்கத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க உப தலைவர் ரவி குமதேஷ் தெரிவித்தார்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய பரிசோதனை தொழில்நுட்ப விஞ்ஞான அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் வைத்தியசாலை பணிப்பாளரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வைத்தியசாலையின் வைத்திய பரிசோதனை தொழில்நுட்ப விஞ்ஞான அதிகாரி
கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்