அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை நிறைவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2015 | 9:59 pm

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை நாளை காலை 8 மணிக்கு நிறைவு செய்யவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான தொழிற்சங்க நவடிக்கையுடன் வைத்தியர்கள் உள்ளிட்ட 18 தொழிற்சங்கங்கள் இணைந்திருந்தன.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளாமை, ஓய்வூதியத்தை இரத்து செய்தமை மற்றும் அரச ஊழியர்களுக்கு வழங்கிய நிவாரணங்களைக் குறைத்தமைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதனால் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக சென்றிருந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமையால், நீண்ட வரிசையில் நோயாளர்கள் காத்திருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்