மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் வழங்கும் நடைமுறை ஆரம்பம்

மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் வழங்கும் நடைமுறை ஆரம்பம்

மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் வழங்கும் நடைமுறை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

01 Dec, 2015 | 10:35 pm

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் வழங்கும் நடைமுறை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் பாடசாலை சீருடைக்காக துணி வழங்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த வருடத்தில் இருந்து அதற்காக வவுச்சர் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் இன்று கல்வி அமைச்சர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்காக மாணவர் ஒருவருக்கு 400 ரூபாவில் இருந்து 750 ரூபா வரை பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படுவதுடன், பிக்கு மாணவர்களுக்கு ஆகக் கூடுதலாக 1700 ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கப்படுகிறது.