கலாநிதி அப்துல் கலாம் பெயரில் உதவித்தொகை திட்டம்

கலாநிதி அப்துல் கலாம் பெயரில் உதவித்தொகை திட்டம்

கலாநிதி அப்துல் கலாம் பெயரில் உதவித்தொகை திட்டம்

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2015 | 11:18 am

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் பெயரில், இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

பசுமை எரிசக்தியின் அவசியம் பற்றியும், நீடித்த வளர்ச்சியை உலக நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களில் கொள்கையாக எப்படி உருவாக்க வேண்டும், அமல்படுத்த வேண்டும் என்பது பற்றி அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.

கலாமின் இந்த நினைவை போற்றும் வகையில், அதே நேரத்தில், அவரது இலட்சியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகவும் புளோரிடா பல்கலைக்கழகம் கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அப்துல் கலாம் பட்ட உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது, இதன் மூலம் இந்திய மாணவர்களுக்கு, 4 ஆண்டு உயர்கலவுக்கு, 56 இலட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். அத்துடன், ஆண்டுதோறும், 12 இலட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

அப்துல் கலாம் விருது, 2016 – 17  இல் இருந்து சிறந்தமாணவர்களுக்கு வழங்கப்படும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்