ஹாலிஎலயில் மகனால் தந்தை குத்திக்கொலை

ஹாலிஎலயில் மகனால் தந்தை குத்திக்கொலை

ஹாலிஎலயில் மகனால் தந்தை குத்திக்கொலை

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2015 | 11:28 am

ஹாலிஎல, உனுகல தோட்டப்பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்தி மகனொருவர் தனது தந்தையை கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

39 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொலையுண்டவரின் மகனான 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்