முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவும் அவரது மனைவியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவும் அவரது மனைவியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2015 | 4:25 pm

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவும் அவரது மனைவியும் பாரிய அளவிலான ஊழல் மோசடியை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகினர்.

தென்னை அபிவிருத்து அதிகார சபை ஊழியர்களை ஜகத் புஸ்பகுமார தனது மனைவியின் சொந்தக் காணி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து வாக்கு மூலம் பதிவு செய்வதற்கே இவர்கள் அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டார்.

மேலும், தென்னை அபிவிருத்தி அமைச்சின் 08 அதிகாரிகளிடமும் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்