போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்திய 725 பேருக்கு  எதிராக வழக்குத் தாக்கல்

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்திய 725 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்திய 725 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2015 | 7:27 am

கொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் போக்குவரத்துவிதிகளை மீறி வாகனம் செலுத்திய 725 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்றுக்காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 4 மணிவரையான பத்து மணித்தியாலங்களில் 725 பேர்
போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நகரின் – ஶ்ரீஜயவர்தனபுர வீதியின் ஜயந்திபுரவில் இருந்து கொழும்பு வரையான பகுதியில் பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

போக்குவரத்து சட்டங்கள் நேற்று முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

இதேவேளை, கொழும்பிற்குள் பிரவேசிக்கும் ஏனைய வீதிகளிலும் போக்குவரத்து விதிமுறைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதன்போது உரிய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாது வாகனங்களை
செலுத்துகின்றவர்கள் மற்றும் வீதிகளை கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராக வழக்குத்
தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன நெரிசலை குறைத்தல் மற்றும் விபத்துகளை தவிர்த்தல் இந்த நடவடிக்கையின்
நோக்கமாகும் என்றும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்