பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலம் பாராளுமன்றம் நோக்கிச் செல்வதற்கு தடை

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலம் பாராளுமன்றம் நோக்கிச் செல்வதற்கு தடை

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலம் பாராளுமன்றம் நோக்கிச் செல்வதற்கு தடை

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2015 | 1:11 pm

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் இணைந்து நடத்தும் எதிர்ப்பு ஊர்வலம் பொல்தூவ சந்தியால் பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஊர்வலம் தொடர்பில் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விளக்கமளித்ததை அடுத்து, நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலம் சில நாட்களுக்கு முன்னர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பை வந்தடைந்தபின்னர், இன்று (27) பாராளுமன்றம் நோக்கிச் செல்வதற்கும், பாராளுமன்றம் அருகே பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டமொன்றை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதனையடுத்து கடுவெல நீதிமன்றத்தில் தலங்கம பொலிஸாரால் விளக்கமளிக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலம் பாராளுமன்றம் நோக்கிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஊர்வலம் பொல்தூவ சந்தியை சென்றடைந்ததும், நீதிமன்றத்தின் தடையுத்தரவை அவர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்