படையினர் வசமுள்ள பாடசாலைகளை விடுவிக்குமாறு சம்பூர் மக்கள் கோரிக்கை

படையினர் வசமுள்ள பாடசாலைகளை விடுவிக்குமாறு சம்பூர் மக்கள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2015 | 9:43 pm

திருகோணமலையில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டு பாடசாலைகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என சம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேச மக்கள் அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து 4 அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்.

புதிய அரசாங்கத்தின் வருகையுடன் தமது சொந்த இடமான சம்பூரில் அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், தமது பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாக அம்மக்கள் தெரிவித்தனர்.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் சம்பூர் ஸ்ரீ முருகன் வித்தியாலயம் ஆகியவற்றை விரைவில் விடுவித்தால் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இலகுவான வழி பிறக்கும் என சம்பூர் மக்கள் வலியுறுத்திக் கூறினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்