நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2015 | 7:17 pm

நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஹுவலை பிரதேசத்தில் 25 இலட்சம் ரூபாவை நபரொருவரிடம் இலஞ்சமாகப்பெற முயன்ற போது அவரை கைது செய்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே கூறினார்.

போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்காமலிருக்கவே பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் கோரியதாக நெவில் குருகே தெளிவுபடுத்தினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்