கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2015 | 8:44 am

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை (28) 18 மணித்தியாலயத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் நாளை முற்பகல் 11 மணிமுதல் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய திருத்தவேலை காரணமாகவே நாளை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்