அறவழிப் போராட்டமே சிறந்தது, தற்கொலையல்ல: மாணவனுக்கான அனுதாப அறிக்கையில் தமிழ் அரசியல் கைதிகள்

அறவழிப் போராட்டமே சிறந்தது, தற்கொலையல்ல: மாணவனுக்கான அனுதாப அறிக்கையில் தமிழ் அரசியல் கைதிகள்

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2015 | 9:11 pm

யாழ். கோண்டாவில் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அனுதாபங்களைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி தற்கொலை செய்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் தங்களுடைய அனுதாபங்களையும் அஞ்சலிகளையும் செலுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக குடும்பங்கள் மற்றும் உறவுகளைப் பிரிந்து சிறைகளில் வேதனையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கோண்டாவில் மாணவனது உயிரிழப்பானது வேதனையை அளிப்பதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனிமேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாரும் தற்கொலை செய்வதை ஒருகாலமும் தமிழ் அரசியல் கைதிகள் விரும்பவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக சாத்வீக வழியிலான அறவழிப் போராட்டங்களை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது எனவும் தமிழ் அரசியல் கைதிகள் அறிக்கையூடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்