யாழ்ப்பாணத்தில் 19ஆவது சர்வதேச மீனவர் தின நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் 19ஆவது சர்வதேச மீனவர் தின நிகழ்வு

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 9:25 pm

19ஆவது சர்வதேச மீனவர் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

மக்கள் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட பலமான வாழ்வாதாரம் மற்றும் நிலைபேறான வாழ்வு எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் 19ஆவது சர்வதேச மீனவர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனீஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் ஆறுமுகம் நடராஜன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய மீனவர்கள் எல்லை கடந்து வருவதால் வட பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான மேடை நாடகமொன்றும் இங்கு அரங்கேற்றப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்