யாழ்ப்பாணத்தில் ரயிலுடன் கார் மோதியதில் ஒருவர் பலி, மூவர் காயம்

யாழ்ப்பாணத்தில் ரயிலுடன் கார் மோதியதில் ஒருவர் பலி, மூவர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 9:52 pm

யாழ்ப்பாணம், சோமசுந்தரம் அவன்யூ பகுதியில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

சோமசுந்தரம் அவன்யூ பகுதியிலுள்ள முதலாவது ரயில் கடவையைக் கடக்க முயன்ற காரொன்றே இன்று பிற்பகல் 1 மணியளவில் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து இன்று அதிகாலை 5.40ற்கு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலிலேயே கார் மோதியுள்ளது.

காயமடைந்துள்ளவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ரயில்வே சமிக்கையை பொருட்படுத்தாமல் கார் ரயில் கடவையை கடக்க முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு பெரிய கல்லாறு பிரதான வீதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மருதமுனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி இன்று கலை 10.30 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்