முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல்

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல்

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 1:25 pm

முறையற்ற விதத்தில் அரசாங்க சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன மற்றும் சில அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் நேற்று (20) அறிவித்தல் விடுத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன, மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் உட்பட மேலும் 3 அதிகாரிகளுக்கு எதிராக, சுமார் 132 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கலப்பு திட்டத்திற்கான நிதியை முறையற்ற விதத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்