மாலியில் துக்க தினம் அனுசரிப்பு: அவசர நிலை பிரகடனம்

மாலியில் துக்க தினம் அனுசரிப்பு: அவசர நிலை பிரகடனம்

மாலியில் துக்க தினம் அனுசரிப்பு: அவசர நிலை பிரகடனம்

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 4:30 pm

வடமேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாலியில், நட்சத்திர ஹோட்டலுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் அங்கிருந்த அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மாலியில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அல்-கய்தாவின் கீழ் இயங்கும் அல்-முராபிடன் குழு பொறுப்பேற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 170 பேரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.
பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையால் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு, பிணைக் கைதிகள் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சுமார் 9 மணி நேரத்திற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்