பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 10:11 am

கட்டளையை மீறிப் பயணித்த கார் ஒன்றின் மீது தங்கொடுவ பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் காரின் சாரதி காயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

சம்பவம் நேற்றிரவு 11.45 அளவில் தங்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து பொலிஸாரால் விடுக்கப்பட்ட கட்டளையை மீறி நிறுத்தாமல் பயணித்த காரின் மீது கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறிப்பிட்ட காரில் பயணித்த மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அந்த காரிலிருந்து கஞ்சா பொதி மற்றும் சட்டவிரோத மதுபானம் அடங்கிய பொதிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தங்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்