பொது வேட்பாளராக மக்கள் போராட்டத்தில் இணைந்துகொண்ட விதத்தை நினைவுகூர்ந்தார் ஜனாதிபதி

பொது வேட்பாளராக மக்கள் போராட்டத்தில் இணைந்துகொண்ட விதத்தை நினைவுகூர்ந்தார் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 7:30 pm

மாலம்பே முன்மாதிரிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட போது பொது வேட்பாளராக மக்கள் போராட்டத்தில் இணைந்துகொண்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்ததாவது;

[quote]கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில், நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு முதல் நாள் முன்னாள் ஜனாதிபதியுடன் ஆப்பம் சாப்பிட்டு, அடுத்த நாள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினேன். இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இன்றைய தினம் ஓய்வற்ற நாளொன்றாகும். கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இதனைப் போன்றதொரு நேரத்தில், எனது மனம் செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தெளிவூட்டுவது கடினமாகும். பாராளுமன்றத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றோம். அங்கிருந்து கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சென்று அதில் நான் கலந்துகொண்டேன்.[/quote]

இதேவேளை, 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி பின்வருமாறு தெரிவித்தார்,

[quote]எனது குடும்ப பின்புலம் தொடர்பில் நீங்கள் அறிவீர்கள். அரசியல் பரம்பரையொன்று எனக்கு இல்லை. அரசர்களின் பின்புலமொன்று இல்லை. இந்த நாட்டின் சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். இலட்சியத்துடனும் அர்ப்பணிப்போடும் நேர்மையுடன் சமூகத்தில் செயற்பட்டமையால், என்னை ஜனாதிபதியாக இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்தார்கள். இவ்வாறு வாழ்க்கையை வெற்றிகொள்ள பாடசாலைக் கல்வி அவசியமாகும். நேற்று சமர்பிக்கப்பட்ட எமது புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 4 மடங்கு நிதியை 2016 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளோம். அறிவாலும் கல்வியாலும் பலப்படுத்துவதே இந்த நாட்டு மக்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நாம் வழங்கக்கூடிய உயர்மட்ட வளமாகும்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்