சீனாவில் 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த ரோபோ

சீனாவில் 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த ரோபோ

சீனாவில் 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த ரோபோ

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 1:10 pm

சீனாவில் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சிறுநீர் கழிப்பதில் மிகவும் சிரமப்பட்டான். எனவே அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் சிபாரிசு செய்தனர்.

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ‘ரோபோ’ மூலம் இந்த ஆஅறுவை சிகிச்சை நடத்த முடிவெடுக்கப்பட்டது. குவாங்கோ நகரில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதை தொடர்ந்து திட்டமிட்டபடி அந்த சிறுவனுக்கு ‘ரோபோ’ அறுவை சிகிச்சை செய்தது, பிரமாண்ட திரைக்கு முன் அமர்ந்த டாக்டர்கள் அங்கிருந்தபடி அறுவை சிகிச்சை தியேட்டரில் படுத்திருந்த சிறுவனுக்கு ‘ரோபோ’ மூலம் ஆபரேசன் செய்தனர்.

சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மருத்துவ உலகில் ‘ரோபோ’ மூலம் முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

லேப்ராஸ்கோபிக் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சை வழக்கத்தை காட்டிலும் குறைந்த நேரத்தில் முடிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்