சாதாரண தர மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகத்திற்காக விசேட ஒருநாள் சேவை

சாதாரண தர மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகத்திற்காக விசேட ஒருநாள் சேவை

சாதாரண தர மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகத்திற்காக விசேட ஒருநாள் சேவை

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 7:33 am

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மாணவர்களின் வசதிகருதி ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட ஒருநாள் அடையாள அட்டை சேவை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள், அடையாள அட்டையை உடனடியாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் இன்று நேரடியாக சமர்ப்பித்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பியவர்களும் இன்று திணைக்களத்திற்கு சமூகமளித்து தமது தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை 8.30 முதல் மாலை 4.30 மணிவரை இந்த விசேட சேவைகள் தொடரும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்