சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவிற்கு உயரிய விருது வழங்கி கௌரவம்

சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவிற்கு உயரிய விருது வழங்கி கௌரவம்

சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவிற்கு உயரிய விருது வழங்கி கௌரவம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 11:52 am

கோவாவில் நேற்று (21) ஆரம்பமாகிய சர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைஞானி இளையராஜா ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கோவாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

தமிழ் திரை இசை உலகில் கொடிக்கட்டி பறந்து வரும்  இளையராஜாவிற்கு  நூற்றாண்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினார்கள். இந்த விழாவில் பேசிய இளையராஜா, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்