சமந்தா பவர் இலங்கை விஜயம்

சமந்தா பவர் இலங்கை விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2015 | 6:27 pm

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமந்தா பவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் இந்த விஜயத்தின் போது சமந்தா பவர் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் நாளை வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்