ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் இன்று இலங்கை வருகை

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் இன்று இலங்கை வருகை

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் இன்று இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 7:40 am

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள சமந்தா பவர் இந்தியாவின் களநிலைமைகளை ஆராய்ந்து வருவதுடன், இன்று இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர் இன்றிலிருந்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, அமெரிக்க மற்றும் இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இதன்பொருட்டு ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

சமந்த பவர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதுடன், அங்குள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

தமது யாழ். விஜயத்தின்போது, மோதல்களினால் சேதமடைந்த ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கட்டட திறப்புவிழாவில் சமந்தா பவர் கலந்துகொள்வதுடன், யாழ். நூலகத்தையும் நேரில்சென்று பார்வையிடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்