உலகில் மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை (Video)

உலகில் மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை (Video)

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 12:29 pm

மனிதர்கள் எதையாவது சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அதனால்தான் எப்போதும் புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.

அதே நேரத்தில் மிகவும் விநோதமான சாதனைகளையும் செய்வதற்கு ஈடுபாடு கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

டச்சு நாட்டின் சைக்கிள் கழகம் ஒன்று உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் பிராங்க் பெல்ட் கூறுகையில், உலகம் முழுவதும் சைக்கிள் வர்த்தகம் மிகவும் அதிக அளவில் நடக்கக் கூடியது. ஆனால் நாங்கள் தயாரித்துள்ளது அதில் இருந்து மாறுபட்ட ஒன்றை என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 117 அடி நீளம் உடைய இந்த சைக்கிளிற்கு இதற்கும் இரண்டு சக்கரங்கள்தான் உள்ளன. இதை இரண்டு பேர் எளிதாக ஓட்டிச் செல்லலாம். உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிள் இதுதான்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்