உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிப்பு

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிப்பு

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 12:55 pm

லுகாரா வைர நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரோவ் சுரங்கத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரம் 2111 கரட் எடை கொண்டது.

இதுவே போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய வைரம் என்பதோடு, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வைரம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

813 மற்றும் 374 கரட் எடை கொண்ட இரு வேறு வைரங்களும் இந்தச் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக லுகாரா நிறுவனம் கூறியுள்ளது.

1905ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 3,106 கரட் எடை கொண்ட வைரமே உலகின் மிகப் பெரிய வைரமாகும்.

இது ஒன்பதாக பிரிக்கப்பட்டு அதில் பெரும்பாலானவை பிரிட்டன் மாகாராணியின் கிரீடத்தை அலங்கரித்து வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்