உடப்பில் நீரில் மூழ்கி 15 வயது சிறுவனை காணவில்லை

உடப்பில் நீரில் மூழ்கி 15 வயது சிறுவனை காணவில்லை

உடப்பில் நீரில் மூழ்கி 15 வயது சிறுவனை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2015 | 9:16 am

முந்தல், உடப்பு பகுதியில் நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் காணாமற்போயுள்ளான்.

உடப்பிலுள்ள, கலப்பில் நண்பர்கள் சிலருடன் நேற்று (20) மாலை குளிப்பதற்காக சென்றிருந்த போதே சிறுவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிரதேச மக்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் கலப்பில் குளிக்கச் சென்றதாகவும், இதன்போது குறிப்பிட்ட சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பவத்தில் உடப்பு 6 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனே நீரில் மூழ்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.

சுழியோடிகளின் உதவியுடன் சிறுவனை தேடும் பணிகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்