வடக்கு, கிழக்கில் 64 சதுர கிலோமீற்றர் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை

வடக்கு, கிழக்கில் 64 சதுர கிலோமீற்றர் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை

வடக்கு, கிழக்கில் 64 சதுர கிலோமீற்றர் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை

எழுத்தாளர் Bella Dalima

20 Nov, 2015 | 7:57 pm

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 64 சதுர கிலோமீற்றர் பகுதியில் இன்னும் கண்ணி வெடிகள் அகற்றப்படாமலிருப்பதாக கண்ணி வெடியை தடை செய்வதற்கான இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

போர் சூழலின் போது கண்ணி வெடிகளை தடை செய்வது மற்றும் இலங்கையில் கொத்தணி குண்டுகளை தடைசெய்வது தொடர்பான இரண்டு மகஜர்கள் குறித்தும் இலங்கையில் அங்கவீனமானவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்கள் பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

முகமாலை, கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளிலுள்ள 64 சதுர கிலோ மீற்றரில் இதுவரை கண்ணி வெடிகள் முழுதாக அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு கண்ணி வெடி பாதிப்பு நிலவிய 2064 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இதுவரை 2000 சதுர கிலோமீற்றர் பகுதியிலுள்ள கண்ணி வெடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்