மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2015 | 10:37 am

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (20) அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சியில் ஔிபரப்புச் செய்யப்பட்ட விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி, ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நேற்றும் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சமூகமளிக்கவில்லை எனவும் அவர் சார்பில் சட்டத்தரணி ஆஜராகியிருந்ததாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதிக்கு, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (20) சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நிஷங்க சேனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்