சீரற்ற வானிலையால் மீரியபெத்த தோட்டத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள் இடம்பெயர்வு

சீரற்ற வானிலையால் மீரியபெத்த தோட்டத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள் இடம்பெயர்வு

சீரற்ற வானிலையால் மீரியபெத்த தோட்டத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2015 | 7:14 am

சீரற்ற வானிலை காரணமாக கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்திலிருந்து 70 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் மழை மானியில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரை குறித்த பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை சமிக்ஞை பதிவாகவில்லை என இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பலத்த மழை பெய்யகூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்