அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான நிர்ணய விலை இன்று முதல் நடைமுறைக்கு

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான நிர்ணய விலை இன்று முதல் நடைமுறைக்கு

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான நிர்ணய விலை இன்று முதல் நடைமுறைக்கு

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2015 | 6:32 am

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட 6 அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலைகள் இன்று (20) முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய மற்றும் சிறிய வெங்காயம், கோழி இறைச்சி, கோதுமை, செத்தல் மிளகாய் ஆகிய ஆறு உணவுப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று முந்தினம் அறிவிக்கப்பட்டன.

அதன்பிரகாரம் ஒரு கிலோகிராம் மைசூர் பருப்புக்கு 190 ரூபாவும், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு 145 ரூபாவும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் சில்லறை விலை 155 ரூபாவாகவும், தோலுரிக்கப்பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 480 ரூபாவாகவும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதியிடப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் அதிகபட்ச சில்லறை விலை 95 ரூபாவாகும்.

செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்