பிரபல ஹொலிவுட் நடிகருக்கு எய்ட்ஸ்

பிரபல ஹொலிவுட் நடிகருக்கு எய்ட்ஸ்

பிரபல ஹொலிவுட் நடிகருக்கு எய்ட்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

18 Nov, 2015 | 4:32 pm

பிரபல ஹொலிவுட் நடிகர் சார்லி ஷீன், தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை வௌிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயத்தை மறைக்க விரும்பவில்லை எனவும் தன்னால் எவரும் எய்ட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபாசப்பட நடிகை ஒருவர் மூலமாகவே அவருக்கு இந்நோய் பரவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

50 வயதாகும் ஷீன் வால் ஸ்ட்ரீட், தி த்ரீ மஸ்கட்டீயர்ஸ், யங் கன்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர்.

2011 ஆம் ஆண்டு டூ அன்ட் ஆஃப் மென் படத்தில் நடித்த போது, பல்வேறு முறைப்பாடுகள் காரணமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அவரை நீக்கிவிட்டது. அதன்பிறகு வேறு படங்களில் அவர் நடிக்கவில்லை.

கடைசியாக அவர் நடத்தி வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றும் நிறுத்தப்பட்டு விட்டது.

மூன்று முறை திருமணமாகி விவாகரத்தானவர் ஷீன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்