மொரட்டுவ, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

மொரட்டுவ, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

மொரட்டுவ, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2015 | 8:18 am

அத்தியவசியமான பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மொரட்டுவ பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளிலுக்கு இன்று முற்பகல் 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 12மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக மொரட்டுவ மாநாகர சபைக்குட்பட்ட இரத்மலானை, சொய்சாபுர,பாணந்துரை ,நல்லூறுவ,கிரிபேரிய ,கெசல்வத்த ,றைகம,பண்டாரகம.வெல்மில்ல,கும்புக்க,ஹொரன மற்றும் மொரந்தொடுவ ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலுபடுத்தப்படவுள்ளது .

இதற்கு மேலதிகமாக கெஸ்பேவ நகர சபைக்குட்பட்ட பொல்கஸ்ஹோவிட்ட சியம்பலாகொட ,வேத்தர,றிலாவெல, அம்பலாங்கொட,ஹெரலியாவெல ,பாலகம,தியகட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்