மாத்தளை வைத்திய சாலையில் திருடிய நபர் ஹெரோயினுடன் கைது

மாத்தளை வைத்திய சாலையில் திருடிய நபர் ஹெரோயினுடன் கைது

மாத்தளை வைத்திய சாலையில் திருடிய நபர் ஹெரோயினுடன் கைது

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 5:54 pm

மாத்தளை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தை உடைத்து, அங்கிருந்த மருந்துகளைத் திருடிச்சென்ற ஒருவர் அனுராதபுரத்திலுள்ள மாத்தளை சந்தியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் அதிகாலை 12.20 அளவில் 20 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து மாத்தளை வைத்தியசாலையில் திருடப்பட்ட மருந்துத் தொகையும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டெமடோல் எனப்படும் 783 வலி நிவாரண வில்லைகளும் குறிப்பிட்ட நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மாத்தளை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தை உடைத்து நேற்றிரவு இந்த மருந்தை திருடியுள்ளமை பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கருந்தன்குளம், மாத்தளை வீதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்