மழை ஓய்ந்தபோதும் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் மன்னார் மக்கள்

மழை ஓய்ந்தபோதும் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் மன்னார் மக்கள்

மழை ஓய்ந்தபோதும் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் மன்னார் மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 5:33 pm

மன்னார் மாவட்டத்தில் மழை ஓய்வடைந்த போதிலும் 1680 பேர் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இதற்கு முன்னர் 1899 பேர் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த போதிலும் தற்போது 1680 பேர் மாத்திரமே தங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மழை ஓய்ந்து வௌ்ள நீர் வடிந்தோடி வருவதால் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இருப்பினும், மன்னார் மாவட்டத்தின் சில இடங்களில் வௌ்ள நீர் தேங்கி நிற்பதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன், நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்