புதிய அரசியலமைப்பிற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

புதிய அரசியலமைப்பிற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 6:23 pm

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாளை (18) அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை 2011 ஆம் ஆண்டில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த வருடம் இதற்கு முன்னர் இரண்டு தடவைகளில் சுமார் 600 பேர் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இன்றைய தினம் மேலும் 2000 பேர் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டதுடன், அதற்கான இன்றைய நிகழ்வில் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

12239501_10153646843316327_3895332964444622591_n 12247204_10153646843081327_1951694226377323345_n 12274545_10153646843071327_7694137696122385117_n

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்