பாலாவின் அடுத்த படத்தில் 5 கதாநாயகர்கள்

பாலாவின் அடுத்த படத்தில் 5 கதாநாயகர்கள்

பாலாவின் அடுத்த படத்தில் 5 கதாநாயகர்கள்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2015 | 10:57 am

விக்ரம் நடித்த ‘சேது’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா தனது முதல் படத்திலேயே திறமையான இயக்குனர் என்ற அடையாளத்தை பதித்தார்.

‘சேது’ படம் வெற்றிகரமாக ஓடியதுடன், பரபரப்பாகவும் பேசப்பட்டது. அதில் நடித்த விக்ரம் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

‘சேது’ படத்தை அடுத்து பாலா, சூர்யாவை வைத்து ‘நந்தா’ படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி பெற்றதுடன், தமிழ் பட உலகில் ஒரு புதிய மாற்றத்துக்கான கதவு திறந்து விட்டது.

பாலா, முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார், அடுத்து அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘பிதாமகன்,’ ‘நான் கடவுள்,’ ‘அவன் இவன்,’ ‘பரதேசி’ ஆகிய படங்கள் பாலாவை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றதுடன், இந்திய அளவில் அவரை பிரபலமாக்கின.

தமிழ் பட உலகின் முதல் வரிசை இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் பாலா இப்போது, ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து பாலா 5 கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதில் விஷால், ஆர்யா, அரவிந்தசாமி, அதர்வா, ராணா ஆகிய 5 பேரும் இணைந்து நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்குகிறது. இதற்கு முன்பு தமிழில், ‘கின்னஸ்’ சாதனைக்காக உருவான ‘சுயம்வரம்’ என்ற படத்தில் மட்டுமே பல கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.

அதன் பிறகு 5 பிரபல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படம் இதுதான். மிக பிரமாண்டமான முறையில் இந்த படம் தயாராகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்