பாரிஸ் தாக்குதல்: உயிரிழந்தவர்களில் 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பாரிஸ் தாக்குதல்: உயிரிழந்தவர்களில் 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பாரிஸ் தாக்குதல்: உயிரிழந்தவர்களில் 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2015 | 11:30 am

பிரான்ஸின் தலைநகரான பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்த 103 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மனுவல் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த ஏனையோரும் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இராணுவ பாடசாலைக்கு விஜயம் செய்த பின்னர் மனுவல் வெல்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ஜீன் யுவேஸ் லீ டிரையன் மற்றும் உள்துறை அமைச்சர் பேர்னாட் கசன்யூவும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

கடந்த வெள்ளிக்கழமை நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர்.

ஆறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 350 பேர் வரை காயமடைந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்