நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2015 | 11:11 am

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றினை அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .

அலரி மாளிகையில் இன்று (17) இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் .

இதேவேளை தேர்தல் முறைமையை மறுசீரமைப்பு குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றினையும் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்