சீரற்ற வானிலையால் 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில்

சீரற்ற வானிலையால் 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில்

சீரற்ற வானிலையால் 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2015 | 12:45 pm

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் மழை ஓய்வடைந்துள்ள போதிலும் மக்கள் தொடரந்தும் முகாம்களில் தங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வௌ்ள நீர் தற்போது படிப்படியாக வடிந்தோடி வருவதாகவும் பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் அநேகமான பாடசாலைகளில் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்