சக்தி FM இன் புத்தகப் புரட்சி செயற்றிட்டம் மூலம் யாழில் 3 நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு

சக்தி FM இன் புத்தகப் புரட்சி செயற்றிட்டம் மூலம் யாழில் 3 நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 9:29 pm

நூலகங்களைப் புதுப்பிக்கும் சக்தி FM இன் புத்தகப் புரட்சி செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று நூலகங்களுக்கு இன்று புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நூலகங்களைப் புதுப்பிக்கும் இந்த செயற்றிட்டத்திற்காக, சக்தி FM நேயர்களால் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சக்தி FM இன் 17 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிலுள்ள 17 நூலகங்களைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் இந்த புத்தகப் புரட்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வளப்பற்றாக்குறை உள்ள நூலகங்களை இனங்கண்டு அவற்றைப் புதுப்பிக்கும் நோக்கில் “புத்தகம் கொடுப்போம், புதுயுகம் படைப்போம்” எனும் தொனிப்பொருளின்கீழ் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்