கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடமாற்ற  வேண்டாமென உண்ணாவிரதப் போராட்டம்

கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடமாற்ற வேண்டாமென உண்ணாவிரதப் போராட்டம்

கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடமாற்ற வேண்டாமென உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2015 | 12:56 pm

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடம் மாற்றம் செய்ய வேண்டாமென வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்றும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச சபைக்கு முன்னால் நேற்று (16) முதல் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கண்டாவளை பிரதேச செயலகத்தினை புதிதாக கட்டுவதற்கு அமைக்கப்பட்டுள்ள இடத்தினால் தமது விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்ட செயலாளருக்கு நாம் தொடர்பினை ஏற்படுத்தினோம்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தே பதிலளிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்