என்னைப்பற்றித் தேடுகிறார் அமைச்சர் ஒருவரின் மகன் – ஹரீன் பெர்னாண்டோ

என்னைப்பற்றித் தேடுகிறார் அமைச்சர் ஒருவரின் மகன் – ஹரீன் பெர்னாண்டோ

என்னைப்பற்றித் தேடுகிறார் அமைச்சர் ஒருவரின் மகன் – ஹரீன் பெர்னாண்டோ

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 10:30 pm

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ஒருவரின் மகன் தொடர்பில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

[quote]நேற்று மாலை எனது அமைச்சிற்குள் நுழைந்து என்னைப்பற்றித் தேடுவதற்கு அமைச்சர் ஒருவரின் மகன் முயற்சி செய்துள்ளார். இது தொடர்பில் நான் நாளை அமைச்சரவையில் பேசவுள்ளேன். அமைச்சர் ஒருவரின் மகனுக்கு இவ்வாறு நடந்துகொள்ள முடியாது. எனது அமைச்சின் விடயங்களை விரும்பியவர்களால் ஆராய முடியாது. அரசியலில் இருந்து நாம் ஒதுக்கிய குடும்பவாதத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு முயல்வதாயின் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. எனது அமைச்சுப் பதவியை நான் இழந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. இவ்வாறானவற்றை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்