இலங்கை மீனவர்களின் உபகரணங்களை விடுவிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்காது – மஹிந்த அமரவீர

இலங்கை மீனவர்களின் உபகரணங்களை விடுவிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்காது – மஹிந்த அமரவீர

இலங்கை மீனவர்களின் உபகரணங்களை விடுவிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்காது – மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2015 | 7:20 am

கடல் எல்லையை அத்துமீறிய குற்றச்சாட்டில் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் படகுககள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை விடுவிக்குமாறு இனிமேல் அரசாங்கம் கோரிக்கை விடுக்காது என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் விடுவிக்கப்பட மாட்டது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

இதேவேளை இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 36 பேரையும் இலங்கை்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுளளார் .

அது தொடர்பில் செலவாகும் நிதியை அரசாங்கமே பொறுப்பேற்கும் என அமைச்சர் கூறினார் .

அதற்கு தேவையான நிதியை குறித்த பிரிவுகளுக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார் .

நீர்கொழும்பு ,யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் இருந்து மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இந்தியாவில் தடுத்து வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .​


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்