அவர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும் – நவீன் திசாநாயக்க

அவர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும் – நவீன் திசாநாயக்க

அவர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும் – நவீன் திசாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 10:39 pm

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் கட்சி அலுவலகம் ஒன்று இன்று கினிகத்ஹேன நகரில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் நவீன் திசாநாயக்க அவன்ற் கார்ட் தொடர்பிலும் திலக் மாரப்பன குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

[quote]அவன்ற் கார்ட் சம்பவம் காரணமாக அமைச்சர் ஒருவருக்கு இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அமைச்சர் கூறிய ஒரு வார்த்தை நல்லாட்சிக்குப் பொருத்தமற்றது. அவர் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும். அதே விடயமே திலக் மாரப்பனவிற்கு நேர்ந்தது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறு என்பதனால் அவரே அந்த வார்த்தைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும். அதன் காரணமாகவே இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் அவருக்குக் கூறினர். எமக்கும் அதே நிலைமை தான். நாமும் தவறு செய்தால் அதுவே இடம்பெறும்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்