அனுராதபுரம் விமானப்படை முகாம் தாக்குதல்: விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

அனுராதபுரம் விமானப்படை முகாம் தாக்குதல்: விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

அனுராதபுரம் விமானப்படை முகாம் தாக்குதல்: விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2015 | 5:40 pm

அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் விசேட மேல்நீதிமன்ற நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி முன்னிலையில் இந்த சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது வான் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் ஒ​ரே நேரத்தில் தாக்குதல் நடத்தி விமானப்படைக்குச் சொந்தமான 10 விமானங்களை முற்றாக அழித்தமை, மேலும் 6 விமானங்களுக்கு சேதம் விளைவித்தமை, பாதுகாப்புப் படையினரை் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்யப்பட்டு, ஏழு வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்