மணல் அகழ்வு தொடர்பில் புதிய அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

மணல் அகழ்வு தொடர்பில் புதிய அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

மணல் அகழ்வு தொடர்பில் புதிய அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2015 | 10:23 am

மணல் அகழ்வு தொடர்பில் புதிய அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பூகோளவியல் மற்றும் அகழ்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் மணல் அகழ்வு தொடர்பில் மாவட்ட ரீதியில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என பூகோளவியல் மற்றும் அகழ்வு பிரிவின் தலைவர் கலாநிதி கித்சிரி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் இந்த குழுவில் அடங்குவதாக அகழ்வு பிரிவு குறிப்பிடுகின்றது.

அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பின்னர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பிலும் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்