நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2015 | 10:58 am

நிலவும் சீரற்ற வானிலையால் யாழ் மாவட்டத்தில் 8000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்தியசெய்தியாளர் கூறுகின்றார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல குடும்பங்கள் இடம்பெயர்நதுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

தொடரும் மழையுடனான காலநிலையால் திருகோணமலை மாவட்டத்தில் 72 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்றும் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை மழை காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்