கொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு புதிய பஸ் சேவைகள்

கொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு புதிய பஸ் சேவைகள்

கொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு புதிய பஸ் சேவைகள்

எழுத்தாளர் Staff Writer

15 Nov, 2015 | 9:13 am

கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் முதல் கட்டமாக காலி வீதியின் கொழும்பு முதல் கட்டுபெத்த வரையிலும் பஸ் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக குறித்த வீதியை ஒருவழிப்பாதையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த பஸ் சேவையை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தனியார் வாகனங்களூடாக கொழும்பிற்கு வரும் மக்கள் இந்த பஸ் சேவையை பயன்படுத்துவதன் மூலம் விரைவில் கொழும்பை வந்தடைய முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்