இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவர், படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது: மஹிந்த அமரவீர

இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவர், படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது: மஹிந்த அமரவீர

இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவர், படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது: மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2015 | 7:26 pm

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அவர்களின் 04 படகுகளையும் தடுத்து வைக்குமாறு பதில் நீதவான் ஆர். சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 109 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்திய மீனர்களை விடுவிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அரசாங்கத்தின் பதில் கிடைக்கும் வரை காத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களுடைய படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்